Theme Check

விக்னேஷ் சிவன், நயன்தாராவை கைது பண்ணுங்க.. கமிஷனர் ஆபீசில் புகார்..!

விக்னேஷ் சிவன், நயன்தாராவை கைது பண்ணுங்க.. கமிஷனர் ஆபீசில் புகார்..!

விக்னேஷ் சிவன், நயன்தாராவை கைது பண்ணுங்க.. கமிஷனர் ஆபீசில் புகார்..!
X

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். சமூக ஆர்வலரான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “அஜித் நடிப்பில், 'ஏகே 62' என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார்.

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நெருங்கி பழகி வருகின்றனர். இவர்கள் ‘ரவுடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

பட்டாசு வெடித்து கொண்டாடியதில், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் பங்கேற்றுள்ளனர். ரவுடிகளை ஒழிக்க தமிழக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால், சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது பொது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it