ஆணவக் கொலை! இளைஞருக்கு நடுரோட்டில் அரிவாள் வெட்டு!!
ஆணவக் கொலை! இளைஞருக்கு நடுரோட்டில் அரிவாள் வெட்டு!!

காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியைச் சேர்ந்த பிரீத்தம் என்பவர் சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதல் இருவரது வீட்டிற்கும் தெரியவந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து காதல் தம்பதி பெங்களூருவில் வசித்து வந்தனர். பின்னர் சில நாட்களுக்கு முன்பு கல்புர்கி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரீத்தம் இருசக்கர வாகனத்தில் வென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த சுஷ்மிதாவின் உறவினர் அரவிந்த் அவரிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவருடன் வந்த மற்ற சிலர் திடீரென தாங்கள் எடுத்துவந்த கத்தியை வைத்து பிரீத்தமை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் ரத்த வெள்ளத்திலிருந்த பிரீத்தம் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் பிரீத்தமை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக உள்ள பெண்ணின் மாமா அரவிந்த் மற்றும் அரவது கூட்டாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

