Theme Check

கலைஞரின் பயணம் நெடுகிலும் உற்ற தோழராக இருந்தவர் அன்பழகன்!! முதல்வர் புகழஞ்சலி!!

முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான, பேராசிரியர் க. அன்பழகன் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர் அன்பழகன்

கலைஞரின் பயணம் நெடுகிலும் உற்ற தோழராக இருந்தவர் அன்பழகன்!! முதல்வர் புகழஞ்சலி!!
X

வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நள்ளிரவு 1 மணிக்கு, தனது 98வது வயதில் காலமானார்.

கலைஞரின் பயணம் நெடுகிலும் உற்ற தோழராக இருந்தவர் அன்பழகன்!! முதல்வர் புகழஞ்சலி!!

தமிழக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பேராசிரியர் அன்பழகனின் மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பேராசிரியர் அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பெரும் இழப்பு. ஸ்டாலினுக்கு அரசியல் ஆசானாகவும், திமுகவிற்கு பெரும் தூணாகவும் இருந்து வந்த பேராசிரியரின் இழப்பு திமுக தொண்டர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.

பேராசிரியர் திரு.அன்பழகனின் உடல் மீது திமுக கொடி போர்த்தப்பட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கலைஞரின் பயணம் நெடுகிலும் உற்ற தோழராக இருந்தவர் அன்பழகன்!! முதல்வர் புகழஞ்சலி!!

இந்நிலையில், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான, பேராசிரியர் க. அன்பழகன் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர் அன்பழகன் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it