தங்கம் வாங்குவது இனி கஷ்டம் தான் போல... ஒரு சவரன் 37 ஆயிரத்தை கடந்தது !!
தங்கம் வாங்குவது இனி கஷ்டம் தான் போல... ஒரு சவரன் 37 ஆயிரத்தை கடந்தது !!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம்.மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2005ம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 600 ரூபாய்.தற்போது ஒரு கிராம் ரூ.4,600 வரை உயர்ந்துள்ளது
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,024-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து, ரூ.4,628-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.76,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

