அப்படியே 2 மடங்காக உயரும் எம்எல்ஏக்கள் சம்பளம்.. புதிய ஊதியம் எவ்வளவு?
அப்படியே 2 மடங்காக உயரும் எம்எல்ஏக்கள் சம்பளம்.. புதிய ஊதியம் எவ்வளவு?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் மாத ஊதியமாக ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ.54 ஆயிரம் பெறுகின்றனர். இதில் ஊக்கத்தொகையாக ரூ. 30 ஆயிரமும் ஊதியமாக ரூ.12 ஆயிரமும் அடங்கும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் திருத்தப்பட்ட ஊதியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊக்கத்தொகையானது ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாகவும், ஊதியம் ரூ. 12 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் ஊக்கத்தொகையுடன் சேர்த்து மாத ஊதியமாக ரூ.90 ஆயிரம் பெற உள்ளனர். டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படாத நிலையில் நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய ஊதியமானது தெலுங்கானாவில் ரூ.2,50,000 ஆகவும் , உத்தரகண்டில் ரூ .1,98,000 ஆகவும், ஹரியாணாவில் ரூ..1,55,000 ஆகவும் உத்தரபிரதேசத்தில் ரூ.95,000 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

