Theme Check

அதிக எடையுள்ள குழந்தையைப் பெற்று அசாம் பெண் சாதனை..! எடை எவ்வளவு தெரியுமா..?

அதிக எடையுள்ள குழந்தையைப் பெற்று அசாம் பெண் சாதனை..! எடை எவ்வளவு தெரியுமா..?

அதிக எடையுள்ள குழந்தையைப் பெற்று அசாம் பெண் சாதனை..! எடை எவ்வளவு தெரியுமா..?
X

அசாம் மாநிலம் சச்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் படல்தாஸ்; இவருடைய மனைவி ஜெயா (27). கர்ப்பமாக இருந்த ஜெயாவுக்கு மே 29ம் தேதி பிரசவ ஆகலாம் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த நேரத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் தயங்கியுள்ளனர். பின்னர், ஜூன் 15ம் தேதி சதிந்திரா மோகன் தேவ் அரசு மருத்துவமனைக்கு ஜெயாவை அவரது கணவர் படல்தாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.

பொதுவாக, கர்ப்பம் தரித்து 38 முதல் 42 வாரங்கள் வரையிலான காலங்களில் பெண்களை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர். ஆனால், ஜெயாவிற்கு சற்று தாமதமானதால் அனைவருக்கும் ஒருவித பயம் இருந்துள்ளது.

இதனையடுத்து, டாக்டர் ஹனிஃப் உள்ளிட்ட சீனியர் டாக்டர்கள் மேற்பார்வையில் சிசேரியன் முறையில் ஜெயாவுக்கு பிரசவம் நடைபெற்றது. மருத்துவர்களின் சீரிய முயற்சியால் ஜெயாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்தக் குழந்தை 5.2 கிலோ கிராம் எடை இருந்துள்ளது.

பொதுவாக, பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோ கிராம் எடை இருக்கும். சில நேரங்களில் 4 கிலோ கிராம் எடை இருந்திருக்கிறது. ஆனால், குழந்தை ஒன்று 5.2 கிலோ கிராம் எடை இருப்பது இதுவே முதன் முறை.

இது புதிய சாதனை என அந்த மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் லஸ்கர் தெரிவித்துள்ளார். ஜெயாவுக்கு இது இரண்டாவது குழந்தை. அவருக்குப் பிறந்த முதல் குழந்தை 3.8 கிலோ கிராம் எடை இருந்துள்ளது. ஜெயாவும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it