Theme Check

விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்.. வன்முறை குறித்து கே.பி.முனுசாமி பேட்டி..!

விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்.. வன்முறை குறித்து கே.பி.முனுசாமி பேட்டி..!

விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்.. வன்முறை குறித்து கே.பி.முனுசாமி பேட்டி..!
X

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

“கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது, அடுத்த பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்டுதான் ஓ.பன்னீர் செல்வம் சென்றார்.

ஆனால், இந்த பொதுக்குழுவுக்கு தடை வாங்க நீதிமன்ற படிக்கட்டு ஏறினார். நீதிமன்றம், ‘பொதுக்குழுவில் கலந்து கொண்டு உங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்’ என்று கூறிய பிறகும் ஓ.பன்னீர் செல்வம் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்.

அவரின் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார். நிச்சயம் கட்சி அவரை கண்டிக்கும். இதற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it