Theme Check

அடேங்கப்பா.. ஒரேநாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனாவா ! திணறும் யோகியின் அரசு !!

அடேங்கப்பா.. ஒரேநாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனாவா ! திணறும் யோகியின் அரசு !!

அடேங்கப்பா.. ஒரேநாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனாவா ! திணறும் யோகியின் அரசு !!
X

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியாகவில்லை.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கே தமிழக அரசும் மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். பல கட்டுப்பாடான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 2ஆவது அலையின்போது தான் பெரியளவில் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. ஆனால் தற்போது அது மிகத்தீவிரமாக பரவி வருவது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,517 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் இன்னும் 1,11,835 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it