Theme Check

வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி.. ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு?

வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி.. ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு?

வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி.. ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு?
X

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெறவேண்டிய ஒலிம்பிக் 2021க்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போதும் அங்கு கொரோனா குறையாமல் பரவி வருகிறது.

இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இப்போது நடத்த வேண்டாம் என்று ஜப்பானில் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் 15,000 தடகள வீரர்கள், சுமார் 50,000 அதிகாரிகள், 70,000 உதவிப் பணியாளர்கள் ஒன்று கூடுகின்றனர்.

ஒரு இடத்தில் கூடுவது என்பது பெரிய ரிஸ்க் என்றும் கொரோனா பரவலும் இன்னும் குறையவில்லை என்றும் மக்கள் கருத்துக் கணிப்பில் கூறியிருந்தனர். ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால் அது கொரோனாவை அதி தீவிரமாகப் பரப்பி விடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டோக்கியோ நகரில் 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அங்கு இதுவரை அதாவது டோக்கியோ நகரில் 10 சதவிகிதம் மக்களுக்கே கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பானில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் சிறிது சிறதாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தொற்று பரவல் தீவிரமானால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it