Theme Check

மீண்டும் அட்டூழியம்! 48 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை!!

மீண்டும் அட்டூழியம்! 48 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை!!

மீண்டும் அட்டூழியம்! 48 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை!!
X

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 48 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், கடலுக்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, 48 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள மீனவர்கள், இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

fisherman 1

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 48 மீனவர்களையும், 6 விசைப்படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே கைதான 36 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன. கைதான மீனவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it