Theme Check

உத்தரபிரதேசத்தில் கொடூரம்.. வைரலாகும் சிறுமியின் பாலியல் பலாத்கார வீடியோ !!

உத்தரபிரதேசத்தில் கொடூரம்.. வைரலாகும் சிறுமியின் பாலியல் பலாத்கார வீடியோ !!

உத்தரபிரதேசத்தில் கொடூரம்.. வைரலாகும் சிறுமியின் பாலியல் பலாத்கார வீடியோ !!
X

கொரோனா பரவலுக்கும் மத்தியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவருக்கு நடந்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எஸ்.பி,யிடம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தான் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 15 வயது மகளை ஆசைவார்த்தை கூறி காதலில் சிக்கவைத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, தனது செல்போனில் ஆபாச வீடியோவையும் பதிவு செய்துள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து என்மகள் கேட்ட போது, ஆபாச வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி தொல்லை அளித்து வருவதாக தன்னிடம் கூறியதாகவும் அந்நபர் புகாரில் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட இளைஞனின் உறவினர்களிடம் புகார் கூறிய போது, அவர்கள் ஆபாச வீடியோவை வைரல் செய்வதாக அச்சுறுத்தினர். பின்னர், அவர்களுடன் பேசுவதை நிறுத்தியவுடன் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துவிட்டான். அது, இப்போது வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக எஸ்.பி பிரபாகர் சவுத்ரி, பாக்பரா காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இளைஞனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். உ.பியில் சிறுமிக்கு நடந்த இந்த கொடூரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it