#BIG NEWS:- குடியரசு தினத்தன்று கொடூரம்.. தலைநகரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 4 பேர் கைது..!
#BIG NEWS:- குடியரசு தினத்தன்று கொடூரம்.. தலைநகரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 4 பேர் கைது..!

குடியரசு தினமான நேற்று, தலைநகர் டில்லியின் விவேக் விஹார் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டார். இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் தலை முடி வெட்டப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக தெருவில் அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது உள்ளூர்வாசிகள் ஆரவாரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் தங்கை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: ‘ஷாஹ்தரா மாவட்டத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது.
இது தொடர்பாக நான்கு குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன’ எனக் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டில்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், “ஆணையம் டில்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பும்” எனக் கூறியுள்ளார். சட்டவிரோத மது விற்பனையாளர்களால் பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

