Theme Check

மனநலம் பாதித்த பெண்ணுக்கு இரவில் நடந்த கொடூரம்.. அதிர்ந்த சென்னை !!

மனநலம் பாதித்த பெண்ணுக்கு இரவில் நடந்த கொடூரம்.. அதிர்ந்த சென்னை !!

மனநலம் பாதித்த பெண்ணுக்கு இரவில் நடந்த கொடூரம்.. அதிர்ந்த சென்னை !!
X

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரின் செயல் மக்களிடத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், மர்மமான முறையில் இறந்து கிடந்த அந்தப் பெண் திருநின்றவூர், நத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி பாக்கியலட்சுமி (55) என்பது, இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மனநலம் பாதிப்பால் தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று சுற்றி விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.

s

இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி இரவு முதல் பாக்கியலட்சுமி வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையில், பாக்கியலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் இறப்பு தொடர்பாக, தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது, பாக்கிய லட்சுமியை திருநின்றவூர் நடுக்குத்தகையைச் சேர்ந்த சக்திவேல் (32) என்ற கூலித்தொழிலாளி இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சக்திவேலை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் பாக்கியலட்சுமியை புதிய கட்டடத்திற்கு இழுத்துச் சென்ற சக்திவேல், அவரை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it