காலைக் கடனை முடிக்கச்சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்.. கிராம மக்கள் மோதல் !!
காலைக் கடனை முடிக்கச்சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்.. கிராம மக்கள் மோதல் !!

சிறுமி ஒருவரை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பதோகர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு காலை கடனை முடிக்கச்செல்வது வழக்கம். அந்தவகையில் வழக்கம்போல் சிறுமி ஒருவர் அதிகாலையில் காலைக் கடனை முடிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் அச்சிறுமியை தனியாக தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் சிறுமி மயங்கியதால் அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பியோடினர். இதையடுத்து அங்கு சின்ற சிலர் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின்னர் தான் சிறுமிக்கு நடந்த கொடூரம் உறவினர்களுக்கும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அருகில் வசிக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டது. அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் கூறுகின்றனர்.
newstm.in

