Theme Check

அரசுப்பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்… நடத்துநர் மீது தாக்குதல்!!

அரசுப்பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்… நடத்துநர் மீது தாக்குதல்!!

அரசுப்பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்… நடத்துநர் மீது தாக்குதல்!!
X

சென்னையில் அரசு பேருந்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய தனியார் பள்ளி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாரிமுனையில் இருந்து கொரட்டூருக்கு 'தடம் எண் 35' மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில், தனியார் பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படியில் தொங்கியபடியும் கிண்டலடித்தபடியும் மற்ற பயணியருக்கு இடையூறு செய்தனர்.

அவர்களை, நடத்துநர் காளிதாஸ் (41) கண்டித்துள்ளார். மாணவர்களின் தொல்லை எல்லை மீறவே, பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மாணவர்கள், காளிதாசை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

bus

அவர்கள் மீது, ஆபாசமாக பேசுதல், சிறு காயம் ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

newstm.in

Next Story
Share it