Theme Check

வியாபாரியை கடத்த முயற்சி – அதிமுக நிர்வாகி கைது!!

வியாபாரியை கடத்த முயற்சி – அதிமுக நிர்வாகி கைது!!

வியாபாரியை கடத்த முயற்சி – அதிமுக நிர்வாகி கைது!!
X

திருப்பூரில் வியாபாரியை கடத்த முயன்ற வழக்கில் .தி.மு. மாவட்ட நிர்வாகி உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தென்னம்பாளையம் வேலன் நகரைச் சேர்ந்த பாபு என்பவர் வாகனங்களுக்கு சீட் கவர் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பாபுவுக்கும், .தி.மு. மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்விக்கும் இடையே இடம் வாங்குவது தொடர்பாகப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, கடந்த 19ஆம் தேதி பாபுவின் வீட்டிற்கு திடீரென ஏழு பேர் கொண்ட கும்பல் புகுந்து கத்தியைக் காட்டி அவரை மிரட்டியுள்ளது. மேலும் அவரை அந்த கும்பல் கடத்த முயன்றது.

admk

அப்போது, பாபுவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே கடத்தல் கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. பாபு அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் .தி.மு. மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்வியின் தூண்டுதலின் பேரிலேயே அந்த கும்பல் பாபுவை கடுத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து செல்வி மற்றும் கடத்தலில் ஈடுபட முயன்ற 7 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it