பட்டப்பகலில் கொலை முயற்சி… தடுத்து நிறுத்திய டிராபிக் போலீஸ்!!
பட்டப்பகலில் கொலை முயற்சி… தடுத்து நிறுத்திய டிராபிக் போலீஸ்!!

சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் மேம்பாலத்தில் நடந்து வந்த பாட்ஷா என்ற நபரை கோழி கார்த்திக், அருண் ஆகிய இரண்டு பேர் தடுத்து நிறுத்தி கத்தியால் வெட்டியுள்ளனர்.
முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்யும் நோக்கத்தோடு தகராறு செய்து வெட்டியதாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் சுகுமார் மற்றும் தலைமை காவலர் பிரகாஷ் ஆகியோர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இருவரும் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று வெட்டிக் கொண்டிருந்த இருவரையும் விரட்டிச் சென்றனர். காலில் வெட்டுப்பட்ட நிலையில் மயங்கி இருந்த நபரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீஸார் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நபர்களில் அருண் என்பவரை பிடித்து விசாரித்தனர். கடந்த தீபாவளி அன்று பாட்ஷா என்பவர் கார்த்திக் மற்றும் அருணை வெட்டியதாக தெரிகிறது.
அதனால் முன் விரோதம் காரணமாக கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார். போக்குவரத்து போலீஸாரின் துரித நடவடிக்கையினால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

