Theme Check

இனி பைக் டாக்சியில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு கிடையாது..!!

இனி பைக் டாக்சியில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு கிடையாது..!!

இனி பைக் டாக்சியில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு கிடையாது..!!
X

பைக் டாக்சியில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் காப்பீடு கிடையாது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கார் ஆட்டோ ஆகிவற்றில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு காப்பீட்டு நிறுவனங்கள் சார்பாக அளிக்கப்படும். ஆனால் பைக் டாக்ஸியில் பயணித்து விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக் டாக்சியில் சென்று விபத்து ஏற்பட்டால் காப்பீடு வழங்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைக் டாக்சிகளில், கார் ஆட்டோ கட்டணங்களை விட மிகக் குறைவான கட்டணம் என்பதனால் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

bike taxi

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் சென்னை, கோவை, மதுரை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸி நிறுவனங்கள் போக்குவரத்து சேவையை நடத்தி வருகிறது.

எனவே பைக் டாக்சியில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்காது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it