Theme Check

பெற்றோர்கள் கவனத்திற்கு.. நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் !!

பெற்றோர்கள் கவனத்திற்கு.. நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் !!

பெற்றோர்கள் கவனத்திற்கு.. நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் !!
X

கொரோனா தொற்று பரவல், பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை (பிப். 27) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமாா் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

polio_drops

பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனா். இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் பாலியோ தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு, மாநகராட்சி சார்பில் 1,647 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

newstm.in

Next Story
Share it