Theme Check

மக்களே கவனம்..!! ரேஷன் கடைகள் முடங்கும் அபாயம்!

மக்களே கவனம்..!! ரேஷன் கடைகள் முடங்கும் அபாயம்!

மக்களே கவனம்..!! ரேஷன் கடைகள் முடங்கும் அபாயம்!
X

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துவருவதால், ரேஷன் பொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆயத்தக் கூட்டத்தில் ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதேபோல ஜூன் 13-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் (கடையடைப்பு) நடைபெறும் என திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.
Next Story
Share it