திருச்செந்தூர் பாத யாத்திரை செல்வோர் கவனத்திற்கு!!
திருச்செந்தூர் பாத யாத்திரை செல்வோர் கவனத்திற்கு!!

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரனோ மூன்றாம் அலை மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. மேலும் நாளை முதல் வெள்ளி சனி ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நெல்லை மாநகரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர (கிழக்கு) துணை ஆணையர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பொதுபக்கள் முன்னதாகவே தாங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

அதேபோல் இரவு ஊரடங்கு என்பதால் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முடிந்தளவு இரவு 10 மணிக்கு மேல் நேரத்தில் பாதயாத்திரை செல்வதை தவிர்த்து கொரனோ பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கடந்த ஒருவாரமாகவே நெல்லை மாநகரில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை கண்காணித்து வருகிறோம் ஒரு வாரத்தில் விதியை மீறியோர் மீது 5000 வழக்குகள் போட்டுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
மருந்து கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதற்காக மருத்து சீட்டுகளை காட்டி தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஊரடங்கில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
newstm.in

