Theme Check

வாகன உரிமையாளர் கவனத்திற்கு.. கண்டிப்பாக இதை கடைப்பிடிக்கணும்..!

வாகன உரிமையாளர் கவனத்திற்கு.. கண்டிப்பாக இதை கடைப்பிடிக்கணும்..!

வாகன உரிமையாளர் கவனத்திற்கு.. கண்டிப்பாக இதை கடைப்பிடிக்கணும்..!
X

வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ், பதிவுச் சான்று ஆகியவற்றை எந்த முறையில் தெரியப்படுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட வரைவு விதியில் கூறப்பட்டிருப்பதாவது:

‘வாகனங்களின் தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்ட விவரத்தை தேதி, மாதம், ஆண்டு என்ற வரிசையில் தெரியப்படுத்த வேண்டும்.

கனரக, நடுத்தர மற்றும் சரக்கு வாகனங்கள், இலகுரக மோட்டார்கள் தங்களின் தகுதிச்சான்று, பதிவுச்சான்றை முன் கண்ணாடியின் இடதுபுறத்துக்கு மேல்பகுதியில் ஒட்ட வேண்டும்.

ஆட்டோ, இ-ரிக்ஷா, இ-கார்ட், குவாட்ரி சைக்கிள் ஆகியவற்றின் தகுதிச்சான்று, பதிவுச்சான்று ஆகியவற்றை முன்பக்க கண்ணாடியின் இடதுபுறத்துக்கு மேல் பகுதியில் ஒட்ட வேண்டும்.

மோட்டார் சைச்கிள், இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை அதன் எஃப்சி சான்று மற்றும், பதிவுச்சான்றை வாகனத்தின் ஏதாவது ஒருபுறம் தெரியுமாறு ஒட்ட வேண்டும்.

இந்தத் தகவல்களை வாகனங்களில் தெரிவிக்கும்போது, நீலநிற பின்புறத்தில், மஞ்சள் நிற எழுத்துக்களில், ஏரியல்போல்ட் சைஸில் இருக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it