Theme Check

செம... ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு ரூ.37,36,590 உதவி அளித்த ஆஸி. வேகப்புயல் !!

செம... ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு ரூ.37,36,590 உதவி அளித்த ஆஸி. வேகப்புயல் !!

செம... ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு ரூ.37,36,590 உதவி அளித்த ஆஸி. வேகப்புயல் !!
X

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை சூறாவளியாக அடித்து வருகிறது. இதில் பொதுமக்கள் கொத்துகொத்தாக சிக்கி தவித்து வருகின்றனர். எனினும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் யாரும் இதில் இருந்து தப்பவில்லை. இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரியளவில் நிலவுகிறது.

இதனால் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். பல மருத்துவமனைகளில் அவரச உதவிக்கு ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி வீரர் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இக்கட்டான நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாட்டு என நினைக்கலாம். ஆனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it