7ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!!
7ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்ந்து 7ஆவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

newstm.in
Next Story

