Theme Check

2 மகள்களுடன் கிணற்றில் பாய்ந்து ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை.. மனைவியிடம் விசாரணை !

2 மகள்களுடன் கிணற்றில் பாய்ந்து ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை.. மனைவியிடம் விசாரணை !

2 மகள்களுடன் கிணற்றில் பாய்ந்து ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை.. மனைவியிடம் விசாரணை !
X

ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது இரு மகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவை சேர்ந்தவர் ஞானவேல்( 44). ஆட்டோ ஓட்டுநரான இவர் மனைவி ஜெயந்தி (38) மற்றும் ஐஸ்வர்யா, பூஜா என்ற இரு மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஞானவேல் கடந்த 15 ஆம் தேதி மகள்களுடன் ஆட்டோவில் வெளியில் சென்றுள்ளார்.

ஆனால், அதன் பின்னர் அவர்கள் மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் ஜெயந்தி எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

s
இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் உள்ள கிணற்றில் அருகே ஆட்டோ ஒன்று அநாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு போலீசார் ஆய்வு செய்தப்போது, ‘அருகில் இருந்த விவசாய கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர் மிதப்பதை கண்டுள்ளனர்.

போலீசார் மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எழும்பூரில் காணாமல் போன ஞானவேல் என்பதும் தந்தை ஞானவேலுடன் மகள்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி பிரேதமாக நீரில் மிதந்துள்ளனர்.
மகள்களுடன் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it