Theme Check

விளையாடிய பெண் குழந்தையை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள்.. சிசிடிவியில் பதிவான கொடூரக் காட்சி!!

விளையாடிய பெண் குழந்தையை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள்.. சிசிடிவியில் பதிவான கொடூரக் காட்சி!!

விளையாடிய பெண் குழந்தையை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள்.. சிசிடிவியில் பதிவான கொடூரக் காட்சி!!
X

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பூங்கொடி நகரை சேர்ந்தவர் அருள் முருகன்(33). இவர்களுக்கு ஹரிபிரியா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்த தம்பதி ஒரே நிறுவனத்தில் பணிபுரிவதால் இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்புவர். அவர்கள் பணிக்கு செல்லும்போது தினமும் தங்களது குழந்தையை அருகில் உள்ள வீட்டில் பார்த்து கொள்ளுமாறு விட்டு விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் தனது குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் மாலை வீடு திரும்பியதும் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர்.

அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆவடி பக்தவச்சலபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(42), திருவள்ளூர் அருகே வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த நந்தா(42) ஆகிய ஆட்டோ டிரைவர்கள் குழந்தையிடம் செயினை பறித்தது தெரியவந்தது. விளையாடிய பெண் குழந்தையை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள்.. சிசிடிவியில் பதிவான கொடூரக் காட்சி!!இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அருள்முருகன் வீட்டின் அருகே கிரஹப்பிரவேச நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு, ஆட்டோவில் வந்த இரு டிரைவர்கள் குழந்தையிடம் சாதுவாக பேசி அழைத்துள்ளனர். பின்னர், குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை கழட்டி எடுத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடையில் அடகு வைத்திருந்த ஒரு சவரன் தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it