Theme Check

ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை! சம்பவத்தில் ஈடுபட்ட புல்லீங்கோ!!

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரது மாமியார் வீட்டில் இருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது 8 பேர் கொண்ட கும்பம் அதிரடியாக வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வெட்டி சாய்த்தது.

ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை! சம்பவத்தில் ஈடுபட்ட புல்லீங்கோ!!
X

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரது மாமியார் வீட்டில் இருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்


தன்ராஜ் ஓட்டேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். அவர் அதே பகுதியில் உள்ள அவரது மாமியார் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது 8 பேர் கொண்ட கும்பம் அதிரடியாக வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வெட்டி சாய்த்தது. பயங்கர ஆயுதங்களால் வெட்டிய அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றது.

ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை! சம்பவத்தில் ஈடுபட்ட புல்லீங்கோ!!
படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தன்ராஜை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தன்ராஜின் மைத்துனர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், சுமன் ஆகியோர் மாமூல் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை! சம்பவத்தில் ஈடுபட்ட புல்லீங்கோ!!
அதுகுறித்து தன்ராஜூம், அவர் மைத்துனரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, ஆத்திரத்தில் 8 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலை தொடர்பாக அஜய், திலக்ராஜ், விக்கி உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ராஜேஷ், சுமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it