Theme Check

அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை திடீர் உயர்வு..!

அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை திடீர் உயர்வு..!

அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை திடீர் உயர்வு..!
X

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாயும், ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீதம் வரி விதித்ததால் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
Share it