முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி..!
முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி..!

ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் என்பதால், அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும்” என, அவருடைய தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாத காலம் பரோலை நீட்டிப்பு செய்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில், “30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை
— Arputham Ammal (@ArputhamAmmal) June 28, 2021
(1/2)

