Theme Check

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறதா பப்ஜி, டிக்டாக் செயலிகள்.. மத்திய அரசு புதிய விளக்கம் !

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறதா பப்ஜி, டிக்டாக் செயலிகள்.. மத்திய அரசு புதிய விளக்கம் !

மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறதா பப்ஜி, டிக்டாக் செயலிகள்.. மத்திய அரசு புதிய விளக்கம் !
X

லடாக்கில் உள்ள இந்தியா- சீன எல்லையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு நாட்டு வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு முதலே இந்தியா - சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அவ்வப்போது படை வீரர்களை குவிப்பதும் பின்னர் திரும்பபெறுவதுமாக நிகழ்ந்து வருகிறது.

india

இதனையொட்டி, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதற்கட்டமாக பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து. அதை தொடர்ந்து அடுத்த இரு கட்டங்களாக மேலும் 106 சீன செயலிகளையும் இந்திய அரசு தடை விதித்தது. சீன செயலிகள் இந்திய பயனர்களின் தகவல்களை திருட முயற்சித்ததாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் பொருட்டு இந்த செயலிகள் தடை செய்யப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

tiktiok

எனினும் ஒருசிலர் சட்டவிரோதமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பப்ஜி கேம் விளையாடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை.

இணைய குற்றங்களை பாதுகாப்பான பிரவுஸர்கள் மூலம் கட்டுப்படுத்துவதற்காக மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it