Theme Check

பப்ஜி மோகம்.. சொந்த வீட்டில் சிறுவர்கள் கைவரிசை: அதிர்ச்சியில் பெற்றோர்..!

பப்ஜி மோகம்.. சொந்த வீட்டில் சிறுவர்கள் கைவரிசை: அதிர்ச்சியில் பெற்றோர்..!

பப்ஜி மோகம்.. சொந்த வீட்டில் சிறுவர்கள் கைவரிசை: அதிர்ச்சியில் பெற்றோர்..!
X

சென்னையில், பப்ஜி விளையாடுவதற்காக பெற்றோருக்கு தெரியாமல் சிறுவர்கள் 8 லட்சம் ரூபாயை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் நடராஜன். இவருடைய ஒரு மகன் 10-ம் வகுப்பும், மற்றொரு மகன் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

நடராஜன், வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, மகன்களை விசாரித்துள்ளார். அப்போது, பப்ஜி விளையாடுவதற்காக 8 லட்சம் ரூபாயை திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடராஜன் அளித்த புகாரின் பேரில், சிறுவர்களின் நண்பன் மற்றும் அவரது பெற்றோர் ராஜசேகர், மெரிட் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
Share it