Theme Check

தஞ்சையில் பெண் சிசு கொலை – தாய் அதிரடி கைது!!

தஞ்சையில் பெண் சிசு கொலை – தாய் அதிரடி கைது!!

தஞ்சையில் பெண் சிசு கொலை – தாய் அதிரடி கைது!!
X

தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பெண் சிசு கழிவறைக்குள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் பெண் சிசு ஒன்று இறந்தநிலையில் கிடப்பதாக அங்கு பணியில் இருந்த செவிலியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கர்ப்பிணி ஒருவர் முகக்கவசம் மற்றும் தலையில் துணி போர்த்தியபடி கழிவறைக்கு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

arrest

இதனால் அப்பெண் பற்றிய விசாரணையை காவல்துறையினர் விரைவுபடுத்தினர். அப்பெண் சுமார் அரைமணி நேரம் கழித்துதான் கழிவறையிலிருந்து வெளியேவருகிறார் என்பதால் அவர்மீது சந்தேகம் வலுத்தது.

பிறந்த குழந்தை நீரில் அழுத்தி கொலை செய்யப்பட்டதா, இல்லை கழிவறையிலேயே குழந்தை பிறந்ததா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அந்த குழந்தையின் தாய், தஞ்சை பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. இந்நிலையில் குழந்தையின் தாய் பிரியதர்ஷினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற உறவால் பிறந்த குழந்தை என்பதால் தாயே குழந்தையை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

Next Story
Share it