ட்விட்டரில் இணைந்த பாலா..! திருக்குறளை குறிப்பிட்டு மாண்புமிகு முதல்வருக்கு முதல் ட்வீட் !
ட்விட்டரில் இணைந்த பாலா..! திருக்குறளை குறிப்பிட்டு மாண்புமிகு முதல்வருக்கு முதல் ட்வீட் !

‘சேது’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தவர் இயக்குநர் பாலா. ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ என அடுத்தடுத்த படங்களில் தேசிய அளவில் கவனம் பெற்றார். ‘நான் கடவுள்’ படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர்.
ஆனால் இதற்குப் பிறகு இவர் இயக்கிய எந்தப் படமும் அந்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ‘தாரை தப்பட்டை’, ‘நாச்சியார்’, ‘வர்மா’ என அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைந்தன. தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா ஒரு படத்தை இயக்குவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலா ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார். தனது முதல் ட்வீட்டாக, சமீபத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
— Director Bala (@IyakkunarBala) May 9, 2021
இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,
தேவையற்ற வாழ்ததுரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள்' என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம்.
நன்றிகள்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.”
என்று குறிப்பிட்டுள்ளார்.

