Theme Check

கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்.. காரணம் என்ன தெரியுமா..?

கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்.. காரணம் என்ன தெரியுமா..?

கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்.. காரணம் என்ன தெரியுமா..?
X

டில்லியில், விரைவில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தேர்தல் நேரத்தில் பலரும் விதவிதமான செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், கிழக்கு டில்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் என்பவர், அப்பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் சாக்கடை தொட்டியில் இறங்கி அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார்.
AAP councillor leaps into sewage drain in East Delhi; bathes in milk later  | Watch
இதனால் அசுத்தம் அடைந்த அவர் மீது, ஆம்ஆத்மி கட்சி தொண்டர்கள் பால் ஊற்றி குளிப்பாட்டினர். இது தொடர்பாக ஹசீப் கூறுகையில், “கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி வழிகிறது என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பாஜக கவுன்சிலரும், பாஜக எம்எல்ஏவும் உதவி செய்யவில்லை. ஆகவே, நானே இறங்கி வேலை செய்தேன்” என்றார்.

Next Story
Share it