ஒரு மாவட்டத்திற்கு மட்டும் தடை!
ஒரு மாவட்டத்திற்கு மட்டும் தடை!

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
31ஆம் தேதி இரவு வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் வீட்டிலேயே மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் புத்தாண்டு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் சாலையோரங்களிலும் பூங்கா மற்றும் அதனை போன்ற இடங்களிலும் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதும் தவிர்க்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெளியூர் செல்வோர் பூட்டிய வீட்டின் விவரத்தை அருகிலுள்ள காவல் நிலையம் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவசர உதவி தேவைப்படுவோர் 100 112 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும் காவலன் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு தொடர்பான நடனம் டிஜே இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தின பாதுகாப்பிற்காக மொத்தம் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
newstm.in

