பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை.. மீறினால்? - ஆட்சியர் எச்சரிக்கை !!
பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை.. மீறினால்? - ஆட்சியர் எச்சரிக்கை !!

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவு கடைகள் பெருகி வருகிறது. பெரும்பாலான கடைகளில் செய்தித்தாள் போன்ற அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி போன்ற பலகாரங்கள் பரிமாறப்படுகின்றன. இதனால் உடல்நல பிரச்சனை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் கடைகளை ஆய்வு செய்தார்.
அதன்பேரில், டீக்கடை போன்ற சாலையோர கடைகளில் பஜ்ஜி வடை போன்ற எண்ணெய் உணவுப் பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் தருகின்றனர். இந்த அச்சு மைகள் கார்பனிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

இதனை கருத்தில் கொண்டு கடைக்காரர்களுக்கும், நுகர்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். 'கருப்பு மை' என்னும் குறும் படத்தை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார்.
அந்த வகையில், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தடையை மீறி அச்சு பேப்பர்களில் இனிய உணவுப் பொருட்களை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என வணிகர்களை எச்சரித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

