Theme Check

ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டருக்கும் தடை!!

ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டருக்கும் தடை!!

ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டருக்கும் தடை!!
X

ரஷ்யாவில் பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனாலும், ரஷ்ய படைகள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் போர் குறித்து பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

ukraine-tv-tower

அதேவேளை, உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷ்ய அரசு ஊடகங்கள் ஐரோப்பாவில் ஒளிபரப்பாவதை பேஸ்புக் நிறுவனம் தடுத்தது.

அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்தது. ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு கூறியது.

இந்நிலையில் பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டருக்கும் தடை விதிக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it