Theme Check

ஹிஜாப் அணிய தடை.. வேலையே வேண்டாம் என திரும்பிய கல்லூரி பேராசிரியை !!

ஹிஜாப் அணிய தடை.. வேலையே வேண்டாம் என திரும்பிய கல்லூரி பேராசிரியை !!

ஹிஜாப் அணிய தடை.. வேலையே வேண்டாம் என திரும்பிய கல்லூரி பேராசிரியை !!
X

கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறியதால் கல்லூரி சிறப்பு பேராசிரியை தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் மற்றும் காவித் துண்டு விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்லூரி வாளகத்தில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு தரப்பு மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு எதிராக காவி துண்டு அணிவித்து மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஒருவாரத்துக்கு பிறகு திறக்கப்பட்டது. அப்போது, ஹிஜாப் அணிந்த மாணவிகளை பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

karnataka-student

இந்த நிலையில், தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர், சுய மரியாதை தான் முக்கியம் எனக் கூறி, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ளது ஜெயின் பியூ கல்லூரி. இந்தக் கல்லூரியில் ஆங்கிலத்துறையில், சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர் சாந்தினி நஸ்.

இவர் தனது வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறி, கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தக் கல்லூரியில், நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வந்துதான் பாடம் எடுத்து வந்தேன். தற்போது இதை அகற்றும்படி கூறுவதால், எனது விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம் சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியல் சாசனம் அனுமதிப்பதை, யாராலும் மறுக்க முடியாது. ஜனநாயகமற்ற உங்களின் செயலை கண்டிக்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜெயின் பியூ கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக இருந்துள்ளேன். எந்தப் பிரச்சினையும் இந்தக் காலகட்டத்தில் வந்ததில்லை. மிகவும் நன்றாகவே வேலைப் பார்த்து வந்தேன. ஆனால், நேற்று காலை பிரின்சிபால் என்னை அழைத்து, தங்களுக்கு வந்துள்ள உத்தரவுப்படி, ஹிஜாப்போ அல்லது வேறு மத அடையாளத்துடனோ வந்து, பாடம் நடத்தக் கூடாது என்று கூறுகிறார். இந்தப் புதிய உத்தரவு எனது சுய மரியாதையை பாதிப்பதாக உள்ளது. எனவே, நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்” என்று வீடியோ ஒன்றையும் பதிவு செய்து, பேராசிரியை சாந்தினி வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it