திருமணங்களுக்குத் தடை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
திருமணங்களுக்குத் தடை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருவதால் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வரும் 30ம் தேதி வரை திருமணம் நடத்த தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவிவருகிறது. இதுவரை அங்கு 4.20 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.41 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில், 74558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4636 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலைவிட இந்தூரில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 11,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து போபாலில் 8934 பேரும், குவாலியரில் 6398 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தூரில் நோய் பரவல் அதிகம் இருப்பதை கவனத்தில் கொண்டு அங்கு வரும் 30ம் தேதி வரை திருமணம் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் தற்போது திருமண தடையும் சேர்ந்துள்ளது.
newstm.in

