Theme Check

பந்தல் சரிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு!!

பந்தல் சரிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு!!

பந்தல் சரிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு!!
X

புதுச்சேரியில் கோவில் திருவிழாவில் பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி பாரதி வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோயிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலின் முகப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பந்தல் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மணி, அவரது மகன் வேலு, சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

pud

அப்போது திடீரென பந்தல் சரிந்து விழுந்துள்ளது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 4 பேரும் சரிந்து விழுந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தில் வேலு, சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து லட்சுமணன் மற்றும் முத்துலிங்கம் ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.

pud

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து பெரியக்கடை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it