களமிறங்கும் ஜூனியர் கேப்டன்! வியூகம் அமைக்கும் பாமக!
களமிறங்கும் ஜூனியர் கேப்டன்! வியூகம் அமைக்கும் பாமக!

தேமுதகி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
ஆனாலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தொகுதியின் பெயரை குறிப்பிடாமல் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அவரது மகன் விஜயபிரபாகரன் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தொண்டர்களின் விருப்பத்தினால் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், முதல் முறையாக விருப்ப மனு தாக்கல் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விருப்ப மனு தாக்கல் செய்ய வரும்போது, விஜயகாந்த், சென்று வா, வெற்றி நமதே என்று கூறி வாழ்த்தியாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். தாம் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தொண்டர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியா, தனித்து போட்டியா என்பதெல்லாம் இன்னும் முடிவாகாததால், தொகுதியை முடிவு செய்யாமல் விஜயபிரபாகரன் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனாலும், விஜய்காந்த்தின் ஜாய்ஸ் விருதாசலம் தொகுதியாக இருக்கிறதாம். இன்னொரு ஜாய்ஸ் மதுரை என்கிறார்கள். அதே சமயம் தேமுதிகவுடன் உள்ள பகையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாராம் ராமதாஸ். பாமக பார்வையில், திமுக, அதிமுக எல்லாம் கிடையாது. மூன்றாவது இடத்தில் இருந்த பாமக இப்போது இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது டாக்டரை வருத்தமடைய வைத்திருக்கிறது.
கடந்த தேர்தலில், அதீத நம்பிக்கையில் மாற்றம், முன்னேற்றம் என்று களமிறக்கிய அறைகூவல், எதற்குமே பிரயோஜனப்படாமல் போகவே கடும் அப்செட்டில் இருந்த அன்புமணியை இந்த முறை உற்சாகப்படுத்தி வருகிறார் ராமதாஸ். விஜய்காந்த் கட்சி ஆரம்பித்த சீக்கிரத்திலேயே, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய தேமுதிகவை வளர விடக் கூடாது என்பதில் அதிக அக்கறை பாமகவிற்கு தானாம். இந்த தேர்தலில், விஜய்காந்த் மகன் எந்த தொகுதியில் நின்றாலும், தேமுதிக நமது கூட்டணியில் இருந்தாலுமே நிச்சயமாக ஜெயிக்க விடக்கூடாது என்று ரகசிய உத்தரவு காற்றில் பறந்து கொண்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
newstm.in

