வங்கிக் கணக்குகள் முடக்கம்.. 22,000 பேர் தவிப்பு.. மத்திய அரசு மீது மம்தா பரபரப்பு புகார் !!
வங்கிக் கணக்குகள் முடக்கம்.. 22,000 பேர் தவிப்பு.. மத்திய அரசு மீது மம்தா பரபரப்பு புகார் !!

அன்னை தெரசா மிஷினரி சேவை நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையால் 22,000-க்கும் அதிகமான நோயாளிகள், ஊழியர்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் அன்று ஒன்றிய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாகவும், இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகள் இன்றி தவித்து வருவதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, சட்டம் மிக முக்கியமானது என்றாலும், அதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை முடக்குவதை ஏற்க முடியாது, என தெரிவித்துள்ளார். மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பை கடந்த 1950ஆம் ஆண்டு அன்னை தெரசா கொல்கத்தாவில் தொடங்கினார். அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளைத்தான் மத்திய மோடி அரசு முடக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Shocked to hear that on Christmas, Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresa’s Missionaries of Charity in India!
— Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2021
Their 22,000 patients & employees have been left without food & medicines.
While the law is paramount, humanitarian efforts must not be compromised.
newstm.in

