வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!!
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!!

பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் ஏற்கெனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர். கத்தோலிக் சிரியன் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஃபெடரல் பேங்க், யூசிஓ பேங்க் உள்ளிட்ட வங்கிகளும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
வங்கி ஊழியர்களின் மிக முக்கியமான கோரிக்கையாக இருப்பது, வெளியிலிருந்து ஆட்களை தற்காலிகமாக எடுத்து அவர்களுக்கு வேலை கொடுக்கும் பிரச்னை. இதனால் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு புதிய வேலைவாய்ப்புகளும் குறைந்துபோவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

சில வங்கிகளில் ஊழியர்கள் கூட்டமைப்பின் குரல் நசுக்கப்படுவதாகவும், சில நேரங்களில் தாக்கப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
newstm.in

