ஐபிஎல்லில் தெறிவிக்க பேட்ஸ்மேன்கள்.. பறந்த சிக்ஸர்களால் புதிய சாதனை !!
ஐபிஎல்லில் தெறிவிக்க பேட்ஸ்மேன்கள்.. பறந்த சிக்ஸர்களால் புதிய சாதனை !!

ஐபிஎல் 2022 தொடரில் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. புதிய வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளன. புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்கள் பிடித்து நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
அதேபோல் அதிரடி வீரர்கள் நிறைந்த பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெளியேறியிருக்கிறது. இப்படியோரு சிறந்த வீரர்களை கொண்ட அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியதா என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 885 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. எனினும் இன்னும் சுமார் பத்து போட்டிகள் சுஞ்சியுள்ளன. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தன.

அந்தச் சாதனையானது நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. லீக் ஆட்டங்கள் முடிய ஒரு வாரம் இருப்பதாலும், அதன் பிறகு ப்ளே ஆஃப் சுற்றுகள் இருப்பதாலும் 1000 சிக்ஸ்ர்கள் அடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களைப் பொறுத்தவரையில், ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் மட்டும் தனியாக 37 சிக்ஸர்களை அடித்து நொறுக்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக கொல்கத்தா அணிக்கு விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஆண்ட்ரூ ரஸல் 32 சிக்ஸர்கள், மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணிக்கு விளையாடும் லிவிங்ஸ்டன் 29 சிக்ஸ்ர்கள் அடித்து அசத்தியுள்ளனர்.
newstm.in

