Theme Check

பேட்டரி சைக்கிள் கண்டுப்பிடிப்பு: மதுரை மாணவருக்கு குவியும் பாராட்டு !!

பேட்டரி சைக்கிள் கண்டுப்பிடிப்பு: மதுரை மாணவருக்கு குவியும் பாராட்டு !!

பேட்டரி சைக்கிள் கண்டுப்பிடிப்பு: மதுரை மாணவருக்கு குவியும் பாராட்டு !!
X

தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிளைக் கண்டுப்பிடித்து அசத்தியுள்ளார் நம்ம மதுரைகார மாணவர் தனுஷ்.

மதுரை மாவட்டம் மேலூர் கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார். தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் தனுஷ் குமார், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். இவரது கண்டுபிடிப்புகளுக்கு குடும்பத்தினரும் உதவியாக இருந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் சோலார் சக்தியின் மூலம் இயங்கும் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், தற்போது புதிய முயற்சியாக ரீசார்ஜபில் இ -பைக் (Rechargeable E-bike) என்ற புதிய சைக்கிளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

cycle

கார்களுக்கு பயன்படுத்தப்படும் 24V ஆல்டர்னேட்டர், பேட்டரி மற்றும் சிறிய மோட்டார் கொண்டு இந்த புதிய சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சைக்கிள் ஓட்டும்போது சைக்கிள் பெடல் பகுதியிலிருந்து செல்லும் செயின் பின் சக்கரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய வகை இ-பைக்கில் ஆல்டரனேட்டருடன் பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது.

சைக்கிளில் ஒருவர் ஓட்டி செல்லும் பொழுது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி தானாகவே சார்ஜ் செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 40 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். 20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். மீதமுள்ள 20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் தானாகவே செல்லும் என்றும் கூறினார். அதாவது பேட்டரியில் இயங்கும் என்றும் தனுஷ் குமார் தெரிவித்தார். இந்த சைக்கிளைத் தயாரிக்க 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it