Theme Check

உஷார்! தமிழகத்தில் 2ஆவது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா!!

உஷார்! தமிழகத்தில் 2ஆவது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா!!

உஷார்! தமிழகத்தில் 2ஆவது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா!!
X

தமிழ்நாட்டில் தொடர்ந்து, 2ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2,000 கடந்து பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,000 கடந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 2,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,77,570 ஆக அதிகரித்துள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 12,158 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து நேற்று மட்டும் 1,321 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் சென்னையில் 1,025 பேருக்கும், செங்கல்பட்டில் 369 பேருக்கும், கோயம்புத்தூரில் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it