Theme Check

உஷார்! காரைக்காலில் காலரா பரவும் அபாயம்!!

உஷார்! காரைக்காலில் காலரா பரவும் அபாயம்!!

உஷார்! காரைக்காலில் காலரா பரவும் அபாயம்!!
X

காரைக்காலில் தீவிர காலரா பரவல் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காலரா நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் காரைக்கால் மாவட்டத்திற்கு புதுச்சேரி அரசு பொது சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

மக்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும், பொது இடங்கள், உணவகங்களில் சுகாதாரமான குடிநீர் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும், உடல் நலம் பாதிக்கப்பட்டால் அரசு ஆரம்ப மருத்துவமனை அல்லது பொதுமருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

cholera

காரைக்காலில் குடிநீரில் கழிவு நீர் கலந்து இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிந்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மன்சூர் தெரிவித்துள்ளார். வாந்தி பேதி காரணமாக இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 691 பேர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலருக்கு காலாரா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it