Theme Check

எச்சரிக்கையா இருங்க மக்களே.. கொரோனா இன்னும் கொறையல..!

எச்சரிக்கையா இருங்க மக்களே.. கொரோனா இன்னும் கொறையல..!

எச்சரிக்கையா இருங்க மக்களே.. கொரோனா இன்னும் கொறையல..!
X

நாடு முழுவதும் கொரோனா பரவல் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த இரு தினங்களாக தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், “கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும், கொரோனாவின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காண, கண்காணிப்பை தொடரவும், பலப்படுத்தவும், மரபணு வரிசை முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் தடுப்பூசியின் பாதுகாப்போடு பள்ளிகளில் சேர முடியும்.

அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் குழு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவாக இருப்பதால் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நமது சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக செல்கிறார்கள். நாடு முழுவதும் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது.

தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

Next Story
Share it