உயர் ரக காரை வாங்கிய ‘தாடி’ பாலாஜி..!

உயர் ரக காரை வாங்கிய ‘தாடி’ பாலாஜி..!

உயர் ரக காரை வாங்கிய ‘தாடி’ பாலாஜி..!
X

நடிகர்கள் விஜய், அஜித்தின் ஆரம்பக்கால சினிமாவில் விவேக், மயில்சாமி, வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்தவர் தாடி பாலாஜி. அதை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார்.

தற்போதும் சினிமாவில் அவர் நடித்து வந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதை ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறார். இடையில் குடும்ப பிரச்னை காரணமாக செய்திகள் வந்த அவர், இப்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கிடைத்த பிரபலம், மேலும் அவரை பிரபலமாக்கியது. அதை தொடர்ந்து விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தவிர, பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நிஷாவுடன் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் சொந்தமான பிஎம்டபுள்யூ காரை வாங்கியுள்ளதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் உயர் ரக வேரியண்டான இந்த மாடல் ரூ. 1 கோடிக்கு மேல் மதிப்புடையது என்பது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

A post shared by Jalko Dhadi Balaji (@jalko_dhadibalaji)

Tags:
Next Story
Share it