ச்சோ க்யூட்..! மகளின் புகைப்படத்தை வெளியிட்டு நடராஜன் உருக்கம்!!
ச்சோ க்யூட்..! மகளின் புகைப்படத்தை வெளியிட்டு நடராஜன் உருக்கம்!!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். உண்மையில் அந்த நாளை ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடியது என கூறலாம். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் நடராஜனின் மனைவிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில், இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நடராஜன் பங்கேற்க உள்ளார். இந்த தொடர் வரும் மார்ச் 12 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அடுத்த வாரம் இந்திய அணியுடன் அகமதாபாத் சென்று இணைய உள்ளார். இந்நிலையில், தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் நடராஜன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி நடராஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், எங்களின் குட்டி தேவதை ஹன்விகா. நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக அமையவும் நீ தான் காரணம். ‘

எங்களை உன் பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் உன்னை நேசித்துக் கொண்டே இருப்போம் என உணர்ச்சிகரமாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு பலரும் குழந்தை ஹன்விகாவுக்கும் நடராஜனுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

